முடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம்


மேல் மாகாணத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கை மேலும் தாமதமாகலாம் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

முடக்கப்படாத இடங்களிலுள்ள பாடசாலைகள் தொடர்பாகவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவை ஜனவரி 11ம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலும், கம்பஹா மாவட்டத்திலும் பாடசாலைகளை திறப்பது சற்றுக் கடினம். சுகாதார நிலைமை, கொரோனா வைரஸ் தொற்று நிலைமை குறித்து நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகிறோம். 

இயலுமான வரையில் விரைவாக அவற்றைத் திறப்போம். முடக்கப்படாத ஏனைய பிரதேசங்களில் திட்டமிட்டபடி ஜனவரி 11ம் திகதி ஆரம்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமுமில்லை என்று  அவர் மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: