நோர்வூட் சமூர்த்தி வங்கி அதிகாரப் பகுதியில் இரண்டு வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


2020 ஆம் ஆண்டுக்கான சமூர்த்தி வீடமைப்பு சீட்டிலுப்பு வேலைத்திட்டத்தின் 
கீழ் அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட நோர்வூட் சமூர்த்தி வங்கியின் அதிகார பகுதிக்குட்பட்ட  ஒல்டன் பிரவுன்லோ வட்டாரத்திலே இரண்டு வீடுகள் நேற்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

சௌபாக்கியா வீடமைப்பு வேலை திட்டத்தின் கீழ் தலா  இரண்டு லட்சம்
பெறுமதியான மேற்படி இரண்டு வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டது.

நோர்வூட் சமுர்த்தி வங்கி முகாமையாளர் வின்சென்ட் ஜயபிரகாஸ் தலைமையில்
பயனாளிகளுக்கு கையளிக்கும் இந்நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் ஆர்.செண்பகவள்ளி,பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக், கள
உதவி முகாமையாளர் சு.புவனேஸ்வரன், சமூர்த்தி  உத்தியோகஸ்தர்களான எ.தேவிகா,ஜி.திவாகர் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.


No comments: