சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது.
புதிய நோயாளர்கள் 11 பேர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மெகசின் சிறைச்சாலையிலேயே அதிகளவான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மெகசின் சிறைச்சாலையில் இதுவரை 824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் 813 பேருக்கும் மஹர சிறைச்சாலையில் 745 பேருக்கும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 390 பேருக்கும் நீர்கொழும்பு சிறைச்சாலையில் 58 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2,857 பேர் குணமடைந்துள்ளனர்.
No comments: