ஐந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பியோட்டம்


பொலன்னறுவை – கல்லேல்ல கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில்  சிகிச்சைப் பெற்று வந்த ஐந்து கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

குறித்த கைதிகள் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து அழைத்துவரப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகியிருந்த 22, 23 26, 32 மற்றும் 52 வதுகளையுடைய ஐந்து கைதிகளே இவ்வாறு தப்பியோடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, அவர்களை கைது செய்யும் நோக்கில், பொலன்னறுவை மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பில் கீழ், விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

No comments: