நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த மேலும் 539 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஜோர்தானில் இருந்து 201 பேரும்,ஜப்பானில் இருந்து 74 பேரும்,ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து 65 பேரும்,அவுஸ்திரேலியாவில் இருந்து 62 பேரும் வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, அவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முப்படையினரால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: