ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்ற குழுக்கூட்டம் இன்று


ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்ற குழுக்கூட்டம்  இன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில்  இன்று மலை  6 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் புதிய ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்த இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாகாணசபை தேர்தல் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் மாகாணசபை தேர்தல் தொடர்பில் இன்று ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: