விமானங்களுக்கான தரையிறக்கல் மற்றும் தரிப்பிடக் கட்டணங்கள் தற்காலிமாக இடைநிறுத்தும்


சர்வதேச விமான நிலையங்களில் இருந்து அறவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரிப்பிடக் கட்டணங்களை, தற்காலிமாக இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி முதல் ஜனவரி 19 ஆம் திகதி வரை, இந்த விடயம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மத்தள மற்றும் ரத்மலானை ஆகிய சர்வதேச விமான நிலையங்களை,  எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சர்வதேச விமான நிறுவனங்களினால் மேற்கொள்ளவுள்ள விமானப் பயண நடவடிக்கைகளுக்கு  வலுச் சேர்க்கும் வகையிலேயே, அமைச்சரவை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

No comments: