மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர்பலி
நேற்றைய தினம்,பிலியந்தலை- ஜாலியகொடை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துடைள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் தந்தையும் நான்கு வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளனர் என்பதோடு தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் வீதியோரத்தில் காணப்பட்ட பூந்தொட்டியில் மோதுண்டமையினால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: