மட்டக்களப்பில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புமட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் இன்று 07 புதிய கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பணிப்பாளர் வைத்தியர் .நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறித்த 07 தொற்றாளர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 210 ஆக உயர்வடைவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் காத்தான் குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு எதிர்வரும் ஜனவரி 05ம் திகதிவரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாட்டத்தில் மொத்தம் 02 கொரோனா தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: