பிரான்ஸில் புதியவகை வைரஸ் தொற்றுறுடன் முதலாவது நபர் அடையாளம்


பிரான்ஸ் நாட்டில் புதியவகை வைரஸ் தொற்றுறுடன் முதலாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 19ம் திகதி லண்டனில் இருந்து நாடு திரும்பிய நபர் ஒருவருக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மிகவும் வேகமாக பரவக்கூடிய புதுவகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பல பயணத்தடை விதித்துள்ளதுடன் கொரோனா தொற்று  சோதனை நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: