நாட்டின் இன்றைய வானிலை


நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ,கிழக்கு,வடமத்திய  மற்றும் ஊவா மாணங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையுடனான வானிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் எனவும் வளிமண்டடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments: