நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவு


நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பிம்புர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 20ம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.

No comments: