வெளி பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

க.கிஷாந்தன்


வெளி பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் பிரவேசித்த 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவின் ஊடாக உட்பிரவேசிக்கும் பிரதான வீதியான அட்டன் – கொழும்பு மார்க்கத்தின் கலுகல பகுதியில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் ஊடாக இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏனையோர் மேல் மாகாணத்திலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்குள் வருகைத் தந்தவர்கள் என அந்த அலுவலகம் கூறுகின்றது.

அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்பகமுவ பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.

No comments: