மதுபோதையில் வாகனம் செலுத்திய மேலும் 82 சாரதிகள் கைது


மதுபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்வதற்கான மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ​ரோஹண தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 20ம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்ட விசேட போக்குவரத்து திட்டத்தின் கீழ் மது போதையில் வாகனம் செலுத்திய 1398 சாரதிகளை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


No comments: