தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட 51 பேர்


தனிமைப்பபடுத்தல்  சட்டவிதிமுறைகளை மீறி சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட 51 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகராம் தெற்கு அதிவேக பாதையில்  பயணித்த பஸ்ஸொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான கொழும்பு வனாத்தமுல்லை பகுதியில் இருந்து கதிர்காமம் நோக்கி பயணித்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களுக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே சுற்றுலா பயணம் மேற்கொண்ட பஸ் பொலிஸாரினால்  கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் பஸ் சாரதி மற்றும் நடத்துனருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: