வாகன விபத்தில் ஒருவர் பலி

இன்று காலை கிளிநொச்சி- பூநகரிப் பகுதியில் உ ந்துருளி ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த நபர் 22 வயதுடையவராகவும் பல்கலைக்கழக மாணவரெனவும் தெரியவந்துள்ளது.

அதன்படி விபத்து தொடர்பில் பாரவூர்தி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments: