சுயநலத்திற்காக மக்களை பலியாக்க வேண்டாம் - பரப்புரையின் போது கருத்து தெரிவித்த வினோகாந்த்


(ஊடகப் பிரிவு)

நான் அரசியல் செய்ய வரவில்லை மக்களுக்கு சேவை செய்தேன் மக்கள் ஏமாற்றப்படுவதை அறிந்தே நான் அரசியலில் உள்நுளைந்தேன் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் வெ.வினோகாந்த் தெரிவித்தார்.

திருக்கோவில் மண்டானை பிரதேசத்தில் மழைக்கு மத்தியில் மக்களின் பேராதரவுடன் இடம் பெற்ற தேர்தல் பரப்புரையின் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்.

நான் கடந்தகாலத்தில் மக்களுக்காக என்னால் முடிந்தளவு சேவைகளை செய்து வந்துள்ளேன் அப்போது அரசியல் எனது எண்ணமாக இருக்கவில்லை மக்களது தேவைகளை முடிந்தளவு பூர்த்தி செய்வதே எனது நோக்கமாக இருந்தது.

இருப்பினும் ஒரு சிலர் மக்களை ஏமாற்றி நாற்காலியை தேய்ப்பது மட்டுமன்றி மக்களை விற்று சுகபோக வாழ்க்கை வாழ்கின்றதுடன் மக்கள் ஏமாற்றுப்படுவதை நான் அறிந்து கொண்டேன்.

எதிர்காலத்திலும் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கும் நாற்காலிகளை தேய்ப்பதற்கும் ஒரு கூட்டம் வீரவசனம் பேசி வாக்குகள் சேகரிக்க கழமிறக்கியிருக்கும் அதே வேளை இவர்களை ஆதரிக்க ஒரு கூட்டம் இருக்கிள்றமை மிக மன வேதனையளிக்கின்றது.

ஏன் மக்கள் அபிவிருத்தியினை விரும்பாமல் பொய் வாக்குறுதிகளை ஏற்றுக் கொண்டு ஏமாறுகின்றனர் என்பது எனக்கு புரியவில்லை

ஆனால் இப்போது மக்கள் இவர்களின் பொய் வாக்குறுதிகளை நம்ப தயார் இல்லை என்றாலும் ஒருசாரார் தங்களின் சுயநலத்திற்காக மக்களை கூறு போட நினைக்கின்றனர் இவர்களால் தான் மக்கள் திசை மாறும் சூழல் ஏற்படுகின்றது.

மக்களிடம் நான் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றேன்

கடந்த காலங்களில் செய்ய முடியாத அபிவிருத்திகளை இனி வரும் கால்களில் இவர்களால் செய்ய முடியுமா ?

அரசியலில் அனுபவம் பெற்ற அரசியல் வாதிகளால் செய்ய முடியாததை 2020 பொதுத் தேர்தலில் அறிமுகமாகியவர்களால் செய்யமுடியுமா ? இவர்கள் அரசியல் படித்து வரும் காலத்திற்கும் ஆட்சி முடிந்து விடும்

நடைமுறையை மக்கள் சிந்திக்க வேண்டும் பெரும்பான்மை கட்சிகளே மாறி மாறி ஆட்சியமைக்கப் போகின்றது அந்த பெரும்பான்மை கட்சியின் ஒரு தமிழ் வேட்பாளர்தான் நான் .

என்னால் முடியும் மக்களுக்கு சேவை செய்ய கடந்த காலங்களில் மக்கள் அதை நன்கு உணர்ந்துள்ளனர் என்றார்.No comments: