மக்களுக்காக சேவை செய்வது இ.தொ.கா மட்டுமே ரமேஸ் பெருமிதம்.
மலையக மக்களுக்காக அன்றிலிருந்து இன்றுவரை சேவை செய்கின்றே ஒரே ஸ்தாபனம் இ.தொ.கா மட்டுமே என முன்னாள் மத்திய மாகாண அமைச்சரும் இ.தொ.கா வின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் மலையக மக்களோடு ஒருமித்து காணப்படுவது இலங்கை தொழிலாளர் காங்கிரஸே. மக்களுக்கு பிரச்சனை என்றால் முதலில் நிற்பதும் இ.தொ.காவே .
மலையகத்தில் இன்னும் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் மக்களோடு தோளோடு தோள் கொடுப்பது நாங்கள் மட்டுமே எனவே இம்முறை மக்கள் சிந்தித்து விட்டார்கள் அதன் பிரதிபலன் பொதுத்தேர்தலில் தெரியும்.இ.தொ.காவின் வெற்றி இப்பொதுத்தேர்தலில் மாபெறும் வெற்றியென ரமேஸ் குறிப்பிட்டார்.
No comments: