நாட்டின் இன்றைய வானிலை


நாட்டில் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதோடு மேல்,வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழை பொழியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படுவதாகவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக் கூடும் எனவும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments: