விசேடத் தேவையுடையோர் வாக்குச் சாவடிக்குச் செல்ல அனுமதி


நாட்டில் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு பார்வை குறைபாடுள்ளவர்கள் மற்றும் விசேடத் தேவையுடைய வாக்காளர்கள் வாக்களிக்கும் தகுதிச் சான்றிதழுக்கான விண்ணப்பங்களை குறித்த பிரதேசத்தில் உள்ள கிராம சேவகரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு அரச வைத்திய அதிகாரியிடம் சமர்ப்பித்ததன் பின்னர் குறித்த நபரின் தகுதிச் சான்றிதழ் பதிவுச் செய்யப்படும்.

அதன்படி தேர்தல் தினத்தன்று வாக்குச் சாவடிக்கு குறித்த நபர் தன் தகுதிச் சான்றிதழை சமர்ப்பித்து , அரசியல் கட்சி வேட்பாளர்கள்,பிரதிநிதிகள் மற்றும் சுயேட்சைக் கட்சி தலைவர்கள் தவிர்ந்த 18 வயதைப் பூர்த்தி செய்த உதவியாளர் ஒருவருடன் வாக்களிக்கச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

No comments: