சரக்கு ரயில் தடம் புரண்டதில் மலையக போக்குவரத்து பாதிப்பு


(எஸ்.சதீஸ்)

சரக்கு ஏற்றி சென்ற புகையிரதம் அம்பகமுவ பகுதியில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான போக்குவரத்து பாதிப்பு கண்டியில் இருந்து பதுளை நோக்கி சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் ஒன்று அம்பேவலபகுதியில் தடம்புரண்டுள்ளமையால் மலையகத்திற்கான ரயில்சேவை பாதிப்படௌந்துள்ளதாக புகையிரத கட்டுபாட்டு நிலையம் அறிவித்துள்ளது

 இந்த சம்பவம் 01.07.2020.புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது குறித்த புகையிரதம் தடம்புரண்டமையால் பதுளையில் இருந்து கொழும்பு பயணிக்கின்ற புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளையும் கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணிக்கும் பயணிகளையும் சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் தடம் புரண்ட பகுதியில் இருந்து மாற்று வழியின் ஊடாக பயணிகள் அனுப்பபடுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது

இதே வேளை சரக்கு ஏற்றிசென்ற புகையிரதம் தடம் புரண்டமையினில் 58000ஆயிரம் லீற்றர் டிசல் வீன்விரயமாகியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது தடம்புரண்ட பகுதியினை சீர்செய்வதற்கான நடவடிக்கையினை புகையிரத கட்டுபாட்டு நிலையம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

No comments: