ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை
நாட்டில் கொரோனா தொற்று கட்டடுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சு வெளியிட்ட வழிகாட்டலுக்கமைய நேற்று பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது.
அதற்கமைய இவ்வழிகாட்டலின் கீழ் பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகளைப் பேணி வர வேண்டும் எனவும் இச்செயன்முறை தினமும் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் இதனை குறித்த பாடசாலை வலயத்தின் அதிகாரி ஒருவர் பொறுப்பாக அது தொடர்பான தகவல்களை பேணி வர வேண்டும் எனவும் குறிப்படப்பட்டுள்ளது.
மேலும் ஆசியர்களுக்கு நேர அட்டவணை வழங்கும் போது பொருத்தமான வழிமுறைகளை கையாள வேண்டும். அதாவது அனைத்து ஆசிரியர்களும் காலை பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலேயே பாடசாலைக்கு வர வேண்டும் என்று அவசியமில்லை. தான் கற்பிக்கும் பாட நேரம் ஆரம்பிப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் வந்தால் போதுமானது.
அன்றைய தினம் குறித்த ஆசிரியர் பாடசாலை வரவில்லை எனில் அதற்கான மாற்று ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை ஆ சிரிய சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் விளக்கம் அளித்துள்ளார்.
அதன்படி இந்த திட்டமிட்டலுக்கு அமையவே முதல்வாரம் அதிபர்களும் ஆசிரியர்களும் கலந்துரையாடி பாட நேர அட்டவணை தயாரித்து கற்பித்தலை திட்டமிட வேண்டும்.
பாடசாலை மட்டங்களில் இத்தகைய விடயங்களை திட்டமிடலாம் என சுற்றுநிருபம் கூறுகிறது.
மேலும் 1 பாடவேளை 1 மணி நேரமாகவும், வாரத்தில் 5 நாட்களும் ஒரே ஆசிரியர் பி.ப 3.30 வரை ஈடுபடாத வகையிலும் வாரத்தில் 1 நாள் 3.30 மணிவரை நிற்கக் கூடியவாறும், குறித்த ஆசிரியர் லீவு எடுப்பதாக இருந்தால் அந்த பாடத்திற்கு பதிலீட்டு ஆசிரியரை வழங்கி லீவு எடுக்குமாறும் இந்த சுற்று நிருபம் அனுமதிக்கிறது என்பதனை இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments: