மஸ்கெலியா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் தீ விபத்து -விரைந்த ஜீவன்


(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா, லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் இன்றிரவு (27.06.2020) ஏற்பட்ட தீ விபத்தால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஒரு வீடு முழுமையாகவும், மற்றுமொரு வீடு பகுதியளவும் சேதமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவலம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், அனர்த்தத்தின்போது வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் கூறினர்.

இது தொடர்பில் கேள்வியுற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன், அவர்களுக்கு 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை தனது சொந்த நிதியில் வழங்கியுள்ளார்.

அத்துடன், குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் மின்ஒழுக்கு இருந்தால் விரைவில் அதனை சீர்செய்யுமாறு தோட்ட முகாமைத்துவ அதிகாரிகளிடம் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
No comments: