புதிய அரசாங்கத்தில் மீண்டும் நானே அமைச்சராக வருவேன் என்கிறார் பழனிதிகாம்பரம்


(சதீஸ்)

கடந்த அரசாங்கத்தின் போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 50ருபா
கொடுப்பணவை வழங்குவதில் துரோகம் இழைத்த துரோகிகளுக்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுதேர்தலில்
வாக்களிக்ககூடாது .

இதேவேளை நாம் அமைக்கவிருக்கின்ற புதிய அரசாங்கத்தில் நானே மீண்டு அமைச்சராக வருவேன் என தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனிதிகாம்பரம் தெரிவித்துள்ளார் 

ஞாயிற்றுகிழமை மாலை பொகவந்தலாவலெச்சுமிதோட்டம் மத்தியபிரிவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் 

 இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பழனிதிகாம்பரம் 

பொகவந்தலாவையில் இடம் பெற்ற மாற்று கட்சியினரின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் ஒருவர் கூறுகிறார் நாம் நான்ங்கரை வருடகாலமாகமக்களை ஏமாற்றி வந்ததாகவும் எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கபடவில்லையென கூறுகிறார் 

80வருடங்கள் தொழிற்சங்கங்கள் நடாத்தி 40வருடம் அமைச்சராக இருந்து எந்த அபிவிருத்திகளையும் முன்னெடுக்காத வங்குரோத்து அரசியல்வாதிகள் என்னை விமர்சனம் செய்கிறார்கள் நான் எவ்வித வேலைத்திட்டங்களும்
முன்னெடுக்கபடவில்லையென கூறுகின்றனர் நான் செய்த அபிவிருத்தி திட்டங்கள் வேறு எவரும் முன்னெடுத்தது இல்லை

மக்களுடைய உரிமைகள் தொடர்பான வேலைத்திட்டங்களை நிறைவேற்றிய பிறகுதான் மக்கள் மத்தியில் வந்து வாக்குகளை கேட்கின்றோம் அது எமது உரிமை நான் யாரையும் எமாற்றவில்லை 

தோட்டதொழிலாளியின் பிள்ளை ஒருவர் பாராளுமன்றம் சென்றால். மாத்திரமே தான் எமது மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களையும் உறிமைகளையும் பெற்றுகொள்ளமுடியும் மக்களின் துன்பங்கள் குறித்த அறியாதவர்கள் பாராளுமன்றம் சென்றால் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறாது மக்களுக்கு என்மீது நம்பிக்கையுள்ளது எனக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது 

2004ம் வருடம் முதல் தேர்தலில் போட்டியிட்டதில் நான் ஒருமுறையாவது தோல்வியினை சந்தித்து கிடையாது ஒவ்வொரு தேர்தலிலும் அதிகபட்ச வாக்குகளையே நான் பெற்று இருக்கிறேன் இந்த முறை இடம்பெறுகின்ற பொதுதேர்தலில் தமிழ் மக்களுடைய வாக்குகளை சிதரடிக்க முயற்சிசெய்கின்றனர் மீண்டும் எனக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கினால் நான்விட்டுசென்ற அபிவிருத்தி திட்டங்களை
மீண்டும் நான் முன்னெடுத்து செல்லுவேன் என குறிப்பிட்டார்

No comments: