மஸ்கெலியாவில் மதுபோதையில் மயங்கி விழுந்தவர் மரணம்


(நீலமேகம் பிரசாந்த்)

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை சீர்பாத பிரிவில் 27ஆம் திகதியன்று இரவு வேளையில் போதையில் தவறி விழுந்ததில் மரணித்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

மேலும், இவ்வாறு மரணித்தவர் வெலிவோயா பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான கணேசன் கண்ணதாசன் என்றும் இவர் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் மதுபோதையில் வீடு திரும்பிய போது பள்ளத்தில் விழுந்ததாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் அவ்வாறு பள்ளத்தில் விழுந்து மரணித்தவரை மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையில் தலையில் பலத்த காயமுற்றுள்ளதுடன் கழுத்திலும் முறிவு ஏற்பட்டமையால் மரணித்ததாக மாவட்ட வைத்திய அதிகாரி லியத்த பிட்டிய குறிப்பிட்டார்.

மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய சார்ஜன் ரூக்மன் மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கவும் தாகவும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

No comments: