அரசியலாக்கப்படும் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கின்றதா ?


மக்கள் மனதில் உள்ளவை!..,

அரசியல் என்ற ஒரு விடையத்தினால் மக்களது பல தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு விடை கொடுக்கப்பட்டிருந்தாலும், கடந்த காலங்களில் மக்களது விடையங்களை, வைத்து அரசியல் நாடகங்கள் அரங்கேரியிருப்பதே நிஜம்.

தற்காலத்தில், ஒரு இடத்திலோ அல்லது ஒரு கிராமத்திலோ,  தீர்க்க முடியாத சிக்கல்கள் காணப்படுமிடத்தில் அது அரசியலாக்கப்படுவது வழமையான செயற்பாடாக மாறியிருக்கின்றது. பின்னர், படிப்படியான அது மறைந்து விடும் மக்களும் ஏமாந்து செல்கின்ற காலமே இங்கு அதிகம்.

தீர்வு பெற்று, தருவதாக முன்னிற்கும் அரசியல் வாதிகள், பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தருகின்றார்களா என்பது கேள்விக்குறியான விடையமாகவே காணப்படுகின்றது.
இதற்கு சிறந்த உதாரணமாக அம்பாறை கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக தரமுயர்வு விடையம், பொத்துவில் கனகர் கிராமம் மீள் குடியேற்ற விடையம், கோமாரி வைத்தியசாலை தரமுயர்த்தல் விடையம் (முன்னாளர் மாகாணசபை உறுப்பினர் கலையரசன் காலத்தில் இருந்து பேசுபொருள் மாத்திரமே) மிக முக்கிமாக பொத்துவில் செங்காமம் கிராம விடையம் இங்கு விடையம் என்று குறிப்பிடுவது வெறும் வார்த்தையல்ல மக்களின் சொல்லொண்ணா துயரின் வெளிப்பாடாகவே அமைகின்றது.
எதிர்வரும், தேர்தல் காலங்களில் அம்பாறை மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், கட்சிகளின் அபேட்சகர்களால்  நாம் மேலே குறிப்பிட்ட இடங்கள், அரசியல் மேடைகளில்,  பேசு பெருளாக மாறினாலும் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

மிக முக்கியமாக பல வருடங்களாக மக்களுக்கு தீர்க்க முடியாமல் இருக்கும் விடையங்களை தேர்தல் காலங்களில் மீண்டும் பேசுபொருளாக மாற்றுவது என்பது நகைப்புக்குரிய ஒரு விடையமாக நாம் பார்க்கின்றோம்.
பொத்துவில் பிரதேச கோமாரி வைத்தியசாலை , திருக்கோவில் தாண்யடி உப தபாலக நிலைய விவகாரங்கள் என அரசியல் வாதிகள் கையிலெடுத்த விடையங்களில் இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பதை நாம் சுட்டிக்காட்ட  விரும்புகின்றோம் மக்களின் மிக முக்கியமான தேவைப்பாடுடைய விடையங்களை பல வருடங்களாக தீர்க்க முடியாத நிலையில் மீண்டும் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு உண்டு என்று தேர்தல் பிரச்சரம் செய்யப்படுமானால் சிந்திக்க வேண்டியவர்கள் மக்களே .
ஏன் மக்களது பிரச்சினைகளை கையில் ஏந்தாமல் எந்தவொரு அரசியல் வாதியினாலும் அரசியல் செய்ய இயலுவதில்லை ? மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்கின்ற ஒருவகையான எண்ணப்பாடா ? அல்லது இது  தான் மக்கள் பலவீனம் என்ற நோக்கமா என்பது நீண்ட நாள்  மக்கள் மத்தியில் பேசு பெருளான மாறியிருக்கின்றது.

தேர்தல் வந்தால் கிராமப்புறங்களில் அதிகமாக அரசியலை பிரதிநிதுத்துவப்படுத்தும் அரசியல் கட்சி சார்ந்த  அபேட்சகர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்கள நாம் காணலாம் அங்குள்ள ஏதோ ஒன்றை சுட்டிக்காட்டி தீர்வு தருவதாக கலந்துரையாடல் நடத்துவதே வழக்கம். ஆனால் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டியதா ? என்பது கேள்விக்குறி!

2020 பொதுத்தேர்தலை பொறுத்த மட்டில் கொவிட்19 தாக்கம் காரணமான சீரான முடிவு இல்லாத போதும் அரசியல் நாடகங்கள் மேடையேறுவதை நாம் காண்கின்றோம்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் கொரோனா தாக்கத்தினால் வாழ்வாதாரமிழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்த அரசியல் வாதிகள்  மற்றும் அபேட்சகர்கள்  பாராட்டப்பட வேண்டியவர்கள்  ஆனால் தேர்தல் முடிந்த பிற்பாடு மக்களால் தெரிவு செய்யப்பட்டாலும் படாவிட்டாலும் மக்களுக்கான இவர்களின் சேவை தொடருமா ? என்பதற்கு காலம் சிறந்த பதில்.

இங்கு நாம் குறிப்பிடும் விடையங்கள் மக்களின் மனதில் உதித்தவை அதன் வெளிப்பாடே இது...

துளியின் சேர்க்கை பெரும் வெள்ளமாக மாறும் இத் துளியின் சேர்க்கை  தொடரும்..............




No comments: