கொரோனாவுக்கு மத்தியில் யாழ்.- கதிர்காம பாதயாத்திரை ஆரம்பம்
கொரோனா நெருக்கடிக்கு, மத்தியில் பாரம்பரிய யாழ்.. கதிர்காம பாதயாத்திரை நேற்று (28) வியாழக்கிழமை ,மதியம் ஆரம்பமாகியது.
வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம், செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை வியாழன்று மதிய பூஜையுடன் ஆரம்பமாகியது.
ஆலயகுருக்கள் சிவஸ்ரீ, உலகநாதக்குருக்கள் பீடத்தில்வைத்துபூஜைசெய்த வேலை பாதயாத்திரைக்குழுத்தலைவ,ர் வேல்சாமியிடம் கையளித்தார்.
அவர் அவ்வேலை பழம்பெரும், பாதயாத்திரீகர் நந்தபாலாவிடம் கையளித்தார். பாதயாத்திரீகர், ஜெயாவும் மற்றெருவேலுடன் வருகைதந்திருந்தார்.
அங்கிருந்து சக பாதயாத்திரீகர்கள் சகிதம் அரோஹரா கோசம் முழங்க பாதயாத்திரை ஆரம்பமாகியது.
கொரோனா அச்சத்தால், பாதயாத்திரை இம்முறை நடைபெறாதோ என ஏங்கிக்கொண்டிருந்த முருக ,பக்தர்களுக்கு பாதயாத்திரை ஆரம்பமாகியது மகிழ்ச்சியளித்துள்ளது.
வியாழன்று இரவு குழுவினர் ,ஆவரங்கால் சிவன்கோவிலில் தரித்து பொழுதைக்கழித்தனர்.
(29) வெள்ளிக்கிழமை பகல் ,குழுவினர் கைதடி முருகன் ஆலயத்தை வந்தடைந்தனர்., மாலை மட்டுவில் பன்றித்தலைச்சிஅம்மனாயலத்தில் தங்கவுள்ளனர்.
பாதயாத்திரைக்குழுத்தலைவர், வேல்சாமி மகேஸ்வரனிடம் இம்முறை எவ்வாறு பாதயாத்திரை சாத்தியமானது? ,என்பதுபற்றி பற்றிக்கேட்டபோது:
'ஆம். முருகன் அருளால் சாத்தியமானது.,வல்வெட்டித்துறை பொலிசாரின் அனுமதியுடன் இம்முறை நேற்று ,வியாழக்கிழமை இப்பாதயாத்திரையை நாம் 25பேர் ஆரம்பித்தோம்.
பொலிசாரின் கட்டளையின் பிரகாரம் ,இந்த 25 அடியார்களைத்தவிர இடைநடுவில் புதிதாக யாரும் ,இணையக்கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் நாம், சுகாதாரநடைமுறைகளை வழிநெடுகிலும் கடைப்பிடிக்கவுள்ளோம்.
நாம் எதிர்வரும் 4ஆம் தி,கதி வற்றாப்பளை அம்மன் ஆலயத்தைச்சென்றடைந்து, மீண்டும், யாத்திரையை மேற்கொள்வோம்.
எனது உடல்தளர்ச்சி காரணமாக இன்றுடன், நான் நந்தபாலாவிடம் வேலைக்கையளித்து பின்னர் காரைதீவால், வரும் போது நானும் சேர்ந்து பயணிக்கவுள்ளேன். முருகபபெருமான் துணை., என்றார்.
வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 ,மாகாணங்களையும் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்த்வு திருகோணமலை மட்டக்களப்,பு அம்பாறை மொனராகல 7மாவட்டங்களையும் இணைத்து, 56நாட்களில் 98ஆலயங்க,ளைத்தரிசித்து 815கிலோமீற்றர் துராத்தை நடந்துகடக்கும் இப்பாதயாத்திரை இலங்கையின் ,மிகமிகநீண்ட தூர கதிர்காமபாதயாத்திரையாககருதப்படுகின்றது.
No comments: