திருக்கோவில், பொத்துவில் பிரதேசசெயலர்கள் முன்னிலையில் குழந்தைகளுக்குபால்மா விநியோகம்.


(காரைதீவு நிருபர் சகா)

அம்பாறை மாவட்டத்தின் தென்கொடியிலுளள பொத்துவில் மற்றும்
திருக்கோவில் பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கான பீடியாபுறோ பால்மா பக்கட்டுகள் வழங்கிவைக்கப்பட்டன.

அந்த வகையில் அம்பாரை மாவட்டம் பொத்துவில் மற்றும் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊறணி மணற்சேனை கோமாரி ஆகிய கிராமங்களில் வசீகரன் சமூக அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் நிறுவுனர் மகான் கோடீஸ்வரன் அவர்களால் இறைபதம் அடைந்த தனது மகன் வசீகரனது 11 வது நினைவு தினத்தையொட்டி நேற்று குழந்தைகளுக்கான பால்மா பெற்றாரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பொத்துவில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் திருக்கோவில் பிரதேசசெயலாளர் த.கஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் காரைதீவு பிரதேசசபையின் தவிசாளரும் சமூக செயற்பாட்டாளருமாகிய கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கலந்துகொண்டு அவற்றை வழங்pவைத்தார்.

இதன் போது 6மாதம் நிரம்பிய குழந்தைகளுக்கும் 1-3 வயது நிரம்பிய குழந்தைகளுக்குமான (பீடியா புரோ) பால்மா பக்கற்றுக்கள் குழந்தைகளின் பெற்றhர்(பராமரிப்பாளர்களிடம்) வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது வசீகரன் சமூக அறக்கட்டளை அமைப்பிற்கு நன்றி தெரிவித்த மக்கள் தங்களது குறைகளை காரைதீவு சமூக செயற்பாட்டாளர் ஜெயசிறில் அவர்களிடம் தெரிவித்தபோது மக்களுக்கான வாழ்வாதார செயற்பாடுகளை முன்னெடுக்க தாம் உதவி செய்வதாக மக்களிடம் தெரிவித்தார்.மேலும் எமது சமூகம் மதுவிற்கு அடிமையாகாமல் நாட்டின் சூழல் அறிந்து செயற்படுமாறும் மக்களை கேட்டுக் கொண்டார்.
No comments: