மறைமுகமான இராணுவ ஆட்சிக்கு வித்துட்டுள்ளது -இரா. துரைரெட்ணம்


(கனகராசா சரவணன்) 

இலங்கையில் புதிய ஜனாதிபதி, தெரிவு செய்யப்பட்டதன் பிற்பாடு மக்கள் ஆட்சி நிலவுவதாக, தெரிவிக்கும் இந்த அரசு பல, நிர்வாகத்துறைகளுக்கு துறைசார்ந்த ,அதிகாரிகளுக்கு, வழங்கவேண்டிய, பதவிகளை இராணுவ ரீதியான அதிகாரிகளுக்கு வழங்குவது, என்பது இலங்கையில் மறைமுகமான இராணுவ ரீதியான ஆட்சிக்கு ,வித்துட்டுள்ளடன் ஜனநாயத்துக்கு இழைக்கப்பட்ட ஒரு, கொடூரம் மட்டுமல்ல ஜனநாயத்துக்கு விடப்பட்ட சாவுமணி என, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில், அமைந்துள்ள பத்மநாபா, ஈ.பி.ஆர்.எல்.எப். காரியாலயத்தில், இன்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர், இவ்வாறு தெரிவித்தார் மட்டக்களப்பு வாகரையில் ,இருந்து துறைநீலாவணை வரையுள்ள கடல். வாவி; குளம் ஆகிய வற்றில், சுருக்குவலை பாவித்து, மீன்பிடிப்பு அதிகரித்துள்ளது 

இதனால் மாவட்டத்தில், கரைவலையுடன் ,சம்மந்தப்பட்ட மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு ஒரு, நேர உணவுக்காக கஷடப்படுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளது ஆகவே, சுருக்குவலை ,போட்டு மீன்பிடிப்பதை மீன்பிடி அமைச்சு அரசாங்க, அதிபர் தடைசெய்ய நடவடிக்கை வேண்டும். 

அதேவேளை மாவட்டத்தில் 2 இலச்த்து, 20 ஆயிரம் ஏக்கர் காணிகள் மேட்டுநில பயிர் செய்கைக்கும் விவசாய, பயிர் செய்கைக்கும் செய்யக் கூடிய விவசாய காணிகள், உள்ளன

 இதில் பெரும்போ,க விவசாயம் செய்யக் கூடிய ஒரு இலச்சத்து 75 ஆயிரத்துக்கு ,மேற்பட்ட காணிகளும் 70 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுபோகம் செய்யக் கூடிய காணிகளும் உள்ளன 

இந்த நிலையில் உரம், வழங்குகின்ற கம்பனிகளுக்கு இலங்கை அரசு இன்னமும் நிதி வழங்கப்படாதன் ,காரணமாக அந்த கம்பனிகள் உரத்தை வழங்காது உள்ளது இதனால் ,சிறுபோகம் செய்யக்கூடிய விவசாயிகள் தமது விவசாய செய்கைக்காக பணம், கொடுத்து வாங்க கூடிய உரவகைகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதுடன், ஊரடங்கு, சட்ட காலத்தில் விவசாயிகள் விவசாயம் செய்ய அனுமதி வழங்கிய இந்த அரசாங்கம் விவசாயிகளின் உரம் சம்மந்தமானதில் ஏன் கரிசனை காட்டவில்லை ? 

இப்போது கொரோனா, வரட்சி போன்ற, காரணமாக மக்கள் பலர் ஒரு நேர உணவு இன்றி வறுமையில் வாடுகின்ற, நேரத்தில் அடிப்படை வாழ்வாதாரத்துக்குரிய பருப்பு பால்வகைகள், தேங்காய் எண்ணெய் போன்ற பல பொருட்களுக்கு அரசு, வரியை அதிகரித்துள்ளது இந்த வரி அதிகரிபை அதிகரித்தது ஏற்றுக் கொள்ள முடியாது எனவே வறுமையில் வாடுகின்;ற மக்களை காப்பாற்ற அரசு இதனை மீள்பரிசீலனை செய்து அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.. 

மத்திய அரசு பொருட்களுக்கு விலை ,உயர்த்த நடவடிக்கை எடுத்தால் அன்று இரலே விலை உயரும் ஆனால் விலை ,குறைத்தால் அடுத்த நாள் காலையில் விலை குறைக்க வாய்ப்பே இல்லை இது, அரசின் நிர்வாக ரீதியான தவறான போக்கை காட்டுகின்றது தென்னிலங்கையில் ,வளமான காடுகளான மத்தளை விமானநிலையம் போன்ற காடுகள் யானைகள் நிரந்தரமாக தங்கி வாழக் கூடிய பகுதியாகும். 

இந்த பகுதிகள் அபிவிருத்தி எனும் ,பேர்வையில் அந்த காடு அபகரிக்கப்பட்டதன் காரணமாக ,அங்கிருந்த யானைகள் மட்டக்களப்பிற்கு 2007 ம் ஆண்டிற்கு பிற்பாடு படையெடுத்ததுதான், வரலாறு மாவட்டத்தில் ஒரு இலச்சத்து 75 ஆயிரம் ஏக்கர் கொண்ட காடு, உள்ள போதும் வரட்சி காரணமாக இந்த யானைகள் தண்ணீர் ,மற்றும் உணவுக்காக வெல்லாவெளி, செங்கலடி, வவுணதீவு , கிரான், வாகரை போன்ற பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 25 இடங்களில், தினமும் மாலை 5 மணி தொடக்கம் காலை 5 மணிவரை ஊடுருவி வேளான்மை ,மற்றும் பயிர் செய்கைகளை அழித்து குடிமனைகளை ,சேதப்படுத்தி மனிதர்களுக்கும் அச்சுறத்தில் விடுக்க கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது 

யானைகளை வரது, தடுப்பதற்கு யானை வேலிகள், அமைத்து அதனை பராமரிக்கும் பொறுப்பு ,ஊர்காவல் படையினரிடம், ஒப்படைக்கப்பட்டுள்ளது ஆனால் யானைகள் வருவதையும் ,போவதையும், தடுக்கும் செயற்பாடு அவர்கள் கையில் இல்லை எனவே ,அரசு மாவட்டத்தில் காடுகளை அதிகரிப்பதற்காக யானைகள் வருவதையும், போவதையும் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்களா? 

என்ற சந்தேகம்,, ஏற்பட்டுள்ளது, எனவே மாவட்டத்தில் விவசாயிக் எதிர் நோக்கும் பிரதான ,பிரச்சனை, யானைகளால் ஆகவே அரசாங்கம் யானைகளை, கட்டுப்படுத்த நடவடிக்கை, எடுக்க வேண்டும்

 இதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் ,பெயர் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு, அதற்கு நிர்வாக கட்டமைப்பை, செயற்பட வைப்பதற்கு நாடாளமன்றம் , மாகாணசபை ,உள்ளூராட்சி ,மன்றம், அரசியல் யாப்பு உட்பட நிர்வாகத்தை செயற்பட பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன 

இப்படிப்பட்ட மக்கள் ,ஆட்சி நிலவுவதாக ,தெரிவிக்கும் இந்த அரசு பல நிர்வாகத்துறைகளுக்கு துறைசார்ந்த ,அதிகாரிகளுக்கு வழங்கவேண்டிய பதவிகளை இராணுவ ரீதியான, அதிகாரிகளுக்கு வழங்குவது என்பது இலங்கையில் மறைமுகமான, இராணுவ ரீதியான ஆட்சிக்கு வித்துட்டுள்ளது

 அப்படியாயின் ,இலங்கையில், இருக்கின்ற துறைசார்ந்த பணிப்பாளர்கள் தலைவர்கள் கொண்ட அதிகாரிகள், இருக்கும் போது இராணுவரீதியான அதிகாரிகளை நியமனம் செய்வது ,என்பது இராணுவ ரீதியான ஆட்சி ஊடாக எதனையும் வெல்லமுடியும் 

என ஜனாதிபதி ,நினைத்து விடக்கூடாது ,ஆகவே இது ஜனநாய, ஆட்சிக்கு வைக்கப்பட்ட ஒரு, முற்றுப்புள்ளி எனவே ,இலங்கையில், துறைவார்ந்த அதிகாரிகள் இருக்கும், போது, அவர்களை ,விட்டுவிட்டு இந்த நியமனங்கள் வழங்குவது ஏற்புடையதல்ல

No comments: