நாளை பிறந்தநாள் | இன்று திறக்கப்படும் பாராளுமன்றம்


மறைந்த ,அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களது பூதவுடலானது இன்று ,பாராளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

இதன் காரணமாக, இன்று, மறைந்த, அமைச்சருக்காக பாராளுமன்றம் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை தனது 56 வது ,பிறந்த தினத்தினை மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ,கொண்டாடவிருந்த நிலையில் தனது 55 வயதில் நேற்று முன் தினம் தலங்கம ,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக, மரணத்தினை தழுவிக் கொண்டார்.

அமைச்சரின் இறுதிக்கிரியைகள்  ஞாயிற்றுக்கிழமை (31.5.2020) பிற்பகல் 2 மணியளவில்  பூரண அரச, மரியாதையுடன் அட்டன் நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில், இடம்பெறவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு ,அறிவித்துள்ளது.

வரலாறு 

1964ஆம் ஆண்டு மே மாதம் 29,ஆம் திகதி பிறந்த சௌம்யமூர்த்தி தொண்டமானின் பேரன் ஆன, ஆறுமுகம் தொண்டமான், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில் அமைச்சராக பதவி, வகித்தவர்.

கோத்தாபய ராஜபக்ஷ ,தலைமையிலான அமைச்சரவையில் ஆறுமுகம் தொண்டமான் தோட்ட, உள்கட்டமைப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சராக இற்றை வரை இருந்தார்.

ஆறுமுகன், தொண்டமான், 1990ம் ஆண்டு ,.தொ.காவில் ,அரசியல் நடவடிக்கைகளில், ஈடுபட்டார். 1993 ஆம் ஆண்டு இ.தொ.காவில் நிதிச் செயலாளராகவும், 1994 ஆம் ,ஆண்டு பொதுச் ,செயலாளராகவும் பதவியேற்றார். முதற் தடவையாக, 1994 நாடாளுமன்றத், தேர்தலில் நுவரெலியா ,மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, நாடாளுமன்றம் சென்றார். அதன் ,பின்னர் 2000, 2004, 2010 மற்றும் 2015ஆம், ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக ,வெற்றி, பெற்றார்.

No comments: