மலையக மக்களுக்காக ஊழைத்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் -சிறிநேசன் இரங்கல்

அமரர் ஆறுமுகம், தொண்டமானின் மறைவுக்கு அரசாங்கம் ஆத்மாத்மாக அஞ்சலி செலுத்துவதாக இருந்தால், மலையக மக்களின் நாளாந்த சம்பளத்தினை ஆயிரம் ரூபாவாக பெற்றுக் ,கொடுப்பதன் மூலமே ஆத்மாசாந்தியடைவதற்கு பொருத்தமாக இருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற, உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

இன்று அவரது அலுவலகத்தில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர், காங்கிரசின் தலைவரின் மறைவினையிட்டு நாங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை, தெரிவித்துக்கொள்கின்றோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொண்டமானால், ஆரம்பிக்கப்பட்ட கட்சியாகும்.அக்கட்சியின், மூன்றாவது சந்ததி தலைவராக ஆறுமுகம் தொண்டமான் இருந்தார்.

அமைச்சராக இருந்து, மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபா தினக்கூலியை வழங்கவேண்டும் என்ற விடயத்தில், மிகவும் அக்கரையுடன் செயற்பட்டுவந்தார்.இதேபோன்று இந்த, விடயத்தில், ஏனைய மலையக தலைவர்களும் அக்கரையுடன் இருந்தார்கள்.


அமரர் ஆறுமுகம் தொண்டமானின், மறைவுக்கு அரசாங்கம் ஆத்மாத்மாக அஞ்சலி செலுத்துவதாக இருந்தால், மலையக மக்களின் நாளாந்த சம்பளத்தினை ஆயிரம், ரூபாவாக பெற்றுக்கொடுப்பதன் மூலமே ஆத்மாசாந்தியடைவதற்கு, பொருத்தமாக இருக்கும்.

இந்தவேளையில் அனைத்து, மலையக தலைவர்களும் இணைந்து அவருக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு முன்மாதிரியான, விடயமாகும்.அரசியல் செயற்பாடுகளில் சிலவேளைகளில் முரண்பாடாக இருந்தாலும் கூட மலையக தமிழ் மக்களுக்கான, உழைத்த தலைவர் என்ற அடிப்படையில் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் ,அவர் முன்னெடுத்த பணிகளை அவரது அடுத்த தலைமுறை, முன்னெடுக்கவேண்டும் என்ற கோரிக்கையினை இந்தவேளையில் முன்வைக்கின்றேன்.

மறைந்த ,ஆறுமுகம் தொண்டமானுக்கு, இதயபூர்வமான, அஞ்சலியை செலுத்துவதுடன் அவரின், இடைவெளியை அவரது அடுத்த தலைமுறை நிரப்பும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: