(செய்திகளின் தொகுப்பு) கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் மலையக மக்கள் | நாளை விடை பெறுகின்றார் அறுமுகன் தொண்டமான்
கேதீஸ்
இலங்கைத் தொழிலாளர் காஸ்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவால் மலையக மக்கள் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசியல் பேதங்களுக்கு அப்பால் மலையக சமூகத்திற்கு தலைமைக்கொடுத்த ஆளுமைமிக்க ஒரு தலைவராக ஆறுமுகன் தொண்டமானை மலையக மக்கள் பார்க்கின்றனர்.
மலையக நகரங்கள், தோட்டப்பகுதிகள்,வீடுகள் எல்லாம் சோகமயத்தில் காட்சியளிக்கின்றன. எல்லா இடங்களிலும் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.
அந்தவகையில் 28.5.2020 தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மலைத்தோட்டம் மக்கள் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து விளக்கேற்றி தங்களது சோகத்தை வெளிப்படுத்தினர்.
கேதீஸ்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையகம் உட்பட இந்தியா வம்சாவளி தமிழர்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் நகரங்களிலும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் தலவாக்கலை ஸ்கல்பா தோட்ட மக்கள் வெள்ளைக்கொடிகள் பறக்கவிட்டதுடன், சோக பந்தலும் அமைத்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் புகைப்படத்தை வைத்து மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிக்கலஸ்
டிக்கோயா பொயிஸ்டன் தோட்ட மக்கள் தலைவரின் பிறந்தநாளை கண்ணீருடன் அஞ்சலி
No comments: