ஆறுமுகன் தொண்டமான் மறைவு வெற்றிடத்திற்கு வேட்பாளர் யார் ? தேர்தல் அணைக்குழு விளக்கம்


தேர்தலொன்றை, நடத்தும் நோக்கத்துக்காக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள, நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாக, குறித்த வேட்பாளர் மரணித்தால், பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் சட்டத்தில் ,தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மலையகத்தின் மூத்த ,தொழிற்சங்கவாதியும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின், தலைவருமான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நேற்றையதினம் உயிரிழந்தார்.

வேட்பாளர் ஒருவர் இறந்தால், அவரது வெற்றிடம் குறித்து பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் முதலாம் ,இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டத்தின் 1988ஆம் ஆண்டு 15ஆம், இலக்க திருத்தத்தின்படி இந்த தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் ,அடிப்படையில், குறித்த ,வேட்பாளரின், மரணம் குறித்து, தேர்தல்கள் ஆணையாளர் திருப்திப்படும், பட்சத்தில் அவரது, கட்சியின் செயலாளர் அல்லது சுயேட்சைக் குழுவின் ,தலைவருக்கு இறந்த வேட்பாளருக்கு, பதிலாக மற்றுமொரு, புதிய வேட்பாளரை ,பரிந்துரைக்குமாறு எழுத்து மூலம் தேர்தல்கள் ,ஆணையாளர் பரிந்துரை செய்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, தேர்தல்கள் ஆணையாளரின், பரிந்துரையின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட, அரசியல் கட்சியின், செயலாளர், அல்லது சுயேட்சைக் குழுவின் தலைவர் மாற்று, வேட்பாளரின் ,பெயர் மற்றும் முகவரி ஆகியவற்றை தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பார்.

இதன் ,அடிப்படையில், குறித்த பரிந்துரை கிடைக்கப் ,பெற்றதும், இறந்த வேட்பாளரின் பெயரை, வேட்புமனு பட்டியலில் இருந்து ,நீக்குமாறும் புதிய வேட்பாளரின் பெயரை, உள்ளிடுமாறும் தெரிவத்தாட்சி, அதிகாரிக்கு தேர்தல்கள் ஆணையாளர் ,பணிப்புரை விடுப்பார்.

இதனை, அடுத்து இறந்த ,வேட்பாளர் குறித்த விபரத்தை வர்த்தமானி அறிவித்தலில், தேர்தல்கள், ஆணையாளர் பிரசுரிப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இறந்த ,வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டு, புதிய வேட்பாளரின் பெயர், உள்ளடக்கப்பட்ட, வேட்புமனுப் ,பத்திரம் தேர்தலுக்காக செல்லுபடியாகும் ,என்பதுடன் குறித்த ,புதிய வேட்புமனுப்பத்திரத்தின் அடிப்படையில் ,நாடாளுமன்றத் தேர்தல், வாக்கெடுப்பு ,நடத்தப்படும் ,என தேர்தல் திணைக்களம், தெளிவு ,படுத்தியுள்ளது.

No comments: